மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில் !

by 9vbzz1

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில் ! on Friday, December 27, 2024

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லியிடம் அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் புதுடில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்