மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர அனுதாபம் ! on Friday, December 27, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுதாபம் தெரிவித்து X பதிவொன்றை விடுத்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் அவருக்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் எண்ணற்ற சகோதர மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை, எனது சார்பாகவும் இலங்கை மக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரான கலாநிதி மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவில் மாத்திரமல்லாமல். 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற மாற்றுக் கொள்கைகளில் சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது.
சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கலாநிதிய மன்மோகன் சிங், நீண்டகால கூட்டுறவுகளை நிறுவுவதற்கு ஆதரவளித்ததோடு, பிரிக்ஸ் போன்ற அமைப்புகளுக்கும் அவர் தனது பங்களிப்பை வழங்கினார். இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் வெளிப்படுகிறது. அவரது பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரச சேவையில் அர்ப்பணிப்பு ஆகியன நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் அமைளு. அவரது ஆன்மா மோட்சம் அடையட்டும்! ”