தமிழ்செல்வனிற்கு நீதிகோரி அழுத்தம்!

by adminDev

கிளிநொச்சி ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் தாக்குதல் நடத்தி வானில் கடத்தும் முயற்சியொன்று  நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.

கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் செல்வனை பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் வழிமறித்து அவ்வாறு கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்ற தமிழ் செல்வன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியமை மற்றும் தகவல் அறியும் சட்டமூலத்தில் தகவல்களை பெற்று பல ஊழல்களை வெளிப்படுத்த முயன்றமையின் காரணமாக தாம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளப்பட்டுள்ளதாக தமிழ் செல்வன் தெரிவித்துள்ளாh’

தமிழ் செல்வன் மீதான தாக்குதல் முயற்சியை கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணியை முன்னெடுக்கும் சூழ்நிலையை வடமாகாணத்தின் மாவட்டங்களில் ஏற்படுத்த பாதுகாப்பு தரப்பினர் பணியாற்ற வேண்டும் என ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்