தமிழரசின் தலைமையில் மாவை நீடிப்பதா, இல்லையா? – மத்திய செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு

by guasw2

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (28) வவுனியாவில் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைமைப்பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு மாவை.சோ.சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி சிவஞானம் சிறிதரன் மற்றும் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நிறைவுக்குப் பின்னர் குறித்த கடிதத்தில் வெளிப்படுத்திய தீர்மானத்தில் தொடர்ந்தும் இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்துக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் கடந்த 14ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

வவுனியாவில் நடைபெற்ற குறித்த கூட்டத்திற்குத் தலைமை வகிப்பது யார் என்பதும் குறிப்பிடப்படாதே மத்தியக் குழு உறுப்பினர்களுக்கான அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்சியின் தலைமைப்பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா தொடரமுடியுமா இல்லையா என்பது தொடர்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இரு அணியாக பிரிந்து வாதப்பிரதிவாதங்களைச் செய்திருந்தார்கள்.

எனினும், நாள் முழுவதும் வாதப்பிரதிவாதங்களை செய்திருந்த நிலையில் ஈற்றில் கட்சியில் தலைமைப்பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா தொடர்வதா, இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பை 28ஆம் திகதி நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைவாக, கட்சியின் பதில் பொதுச்செயலாளரான வைத்தியர் ப.சத்தியலிங்கம் சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழைக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

குறித்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், முதலில் கட்சியின் தலைமையில் மாவை.சோ.சேனாதிராஜா நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதனையடுத்து 14ஆம் திகதி நடைபெற்ற மத்திய செயற்குழுவின் அறிக்கை வாசிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இச்செயற்பாடுகளை அடுத்து, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான  மீளாய்வும், கட்சியின் 75ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வு சம்பந்தமான திட்டமிடலும், கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட முடியாது என்பதனால் பதில் பொதுச் செயலாளர் மத்தியக் குழுவிலிருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமெனக் கோரி அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் யாழ்.நீதிமன்றத்தில் கடந்த 18ஆம் திகதி வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து 14ஆம் திகதி நடைபெற்ற மத்திய செயற்குழுவின் அறிக்கை வாசிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இச்செயற்பாடுகளை அடுத்து, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான  மீளாய்வும், கட்சியின் 75ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வு சம்பந்தமான திட்டமிடலும், கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் பதில் பொதுச் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமெனக் கோரி அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் யாழ்.நீதிமன்றத்தில் கடந்த 18ஆம் திகதி வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

வாசிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இச்செயற்பாடுகளை அடுத்து, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான  மீளாய்வும், கட்சியின் 75ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வு சம்பந்தமான திட்டமிடலும், கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் பதில் பொதுச் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமெனக் கோரி அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் யாழ்.நீதிமன்றத்தில் கடந்த 18ஆம் திகதி வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில், இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாளைய மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு எவ்விதமான தடை உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்