2
சிறீதரன் ஆதரவாளர்களிற்கு கெடுபிடி!
மீண்டும் நாலாம் மாடி விசாரணைகளை அனுர அரசும் முடுக்கிவிட்டுள்ளது. இன்று முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வலது கையுமான சண்முகராஜா ஜீவராஜா அவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
நாளை முன்னாள் கரைச்சி தவிசாளர் வேழமாலிகிதன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் சிறீதரன் தரப்பு நெடுந்தீவு அமைப்பாளருக்கு என விசாரணைகள் தொடர்கிறதென தெரியவந்துள்ளது.