கொழும்பு – பதுளை இடையே விசேட ரயில் சேவை!

by smngrx01

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரயில்வே திணைக்களத்தின் 160 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் இருந்து பதுளை வரையான ரயில் இன்று அபேபுஸ்ஸ வரை விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: railwayரயில்வே

தொடர்புடைய செய்திகள்