2
காலி கோட்டை பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
தொல்பொருள் நினைவுச் சின்னமான காலி கோட்டையின் பழைய கோட்டைச் சுவரைப் பாதுகாப்பதே இதற்குக் காரணம்.
வாயில்களைச் சூழவுள்ள பகுதியில் இரசாயன பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண தொல்பொருள் பணிப்பாளர் திருமதி வசந்தி அழககோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை முதல் 31 ஆம் திகதி வரை காலி கோட்டைக்குள் நுழைவதும் வெளியேறுவதும் புதிய கோட்டை வாயில்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.