on Friday, December 27, 2024
(சித்தா)
களுவாஞ்சிகுடி வடக்கு – 1 RDS பாலர் பாடசாலையின் கலைவிழாவும்,பரிசளிப்பு விழாவும் 26.12.2024 இல் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் திருமதி.யசீதா திஷாந் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்விப் பணியக பாலர் பாடசாலை வெளிக்கள உத்தியோகஸ்த்தர் சு.நிதர்ஷோன் மற்றும் வெல்லாவெளிப் பிரதேச செயலக இந்து சமய கலாசார உத்தியோகஸ்த்தர் யோ.சதேசா அவர்களுடன் ஆசிரியர் திருமதி.மேகராஜ் தர்ஷிகா, களுவாஞ்சிகுடி பிரித்தானியக் கிளை பொருளாளர் திருமதி.ர.ஜெயபாலன், சுகாதாரப் பரிசோதகர் ஞா.சிவசுதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஓய்வு நிலை ஆசிரியர் பண்டிதர் தா.கோபாலகிஸ்ணன், பாலர் பாடசாலை முதன்மை ஆசிரியர் திருமதி.லலிதராணி ஜெயரூபன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
திருமதி.மிதுனா சபாநீதனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான மேடை நிகழ்வுகள் பல்வேறு கலைநிகழ்சிகளுடனும், பரிசளிப்பும் இணைந்து அரங்கு களைகட்டியதுடன் திருமதி. கேசவன் கோமிதாவின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.