இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

by admin

இந்தியவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் ( Manmohan Singh), தனது 92 ஆவது வயதில் காலமானார்.

மன்மோகன் சிங், இந்தியாவின் நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர்களில் ஒருவராக இருந்தார்.

மேலும், அவர் 2004-2014 முதல் பிரதமராகவும் அதற்கு முன் நிதி அமைச்சராகவும் முக்கிய தாராளமயமாக்கல் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாகவும் கருதப்பட்டார்.

நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (28) இரவு 09.51 மணியளவில் காலமானார்.

மன்மோகன் சிங்கின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரின் இழப்பிற்கு இரங்குகிறது” என்று எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில், காங்கஸ் அடுத்த ஏழு நாட்களுக்கு அதன் அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துள்ளது.

அதேநேரம், அவரது அரசியல் சாணக்கியத்தை நினைவு கூர்ந்த தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிங், அண்மைய வருடங்களில் உடல்நலக் காரணங்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மேலும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

அவர் இறுதியாக 2024 ஜனவரியில் அவரது மகளின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அவர் 2024 ஏப்ரலில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார்.

மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA)) கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தி இரண்டு முறை தொடர்ந்து பிரதமராக பணியாற்றினார்.

1991 ஆம் ஆண்டு பிவி நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியாக இருந்தார்.

சிங்கின் பிரதம மந்திரி பதவிக்காலம் முன்னோடியில்லாத பொருளாதார வளர்ச்சியால் குறிக்கப்பட்டது, இது இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக நிலைநிறுத்தியது மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற முக்கிய சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்