6
இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சிமோனா ஹாலெப் (Simona Halep), நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்று மற்றும் பயிற்சிப் போட்டிகளிலிருந்து விலகினார்.
முழங்கால் மற்றும் தோள்பட்டையில் வலி காரணமாகவே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
ஊக்கமருந்து தடைக்குப் பின்னர் டென்னிஸ் அரங்கில் மீண்டும் தன்னை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டிருக்கும் 33 வயதான முன்னாள் உலக நம்பர் வன் ரூமேனிய வீராங்கனை, அடுத்த மாதம் மெல்போர்ன் பூங்காவில் நடைபெறும் ஆண்டின் முதல் டென்னிஸ் பருவத்தில் விளையாடுவாரா என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.
ஊக்க மருந்து பயன்பாட்டுக்காக சிமோனா ஹாலெப்க்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டது.
பின்னர் அது ஒன்பது மாதங்களாக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.