வயலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

by smngrx01

வயலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு! கொஸ்கொடை, பெலகஸ்பலாத்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயலை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலை சுற்றி சட்டவிரோதமாக மின்சார வேலிகளைப் பொருத்தியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இந்த இளைஞன் வயலுக்குச் சென்றுள்ள நிலையில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்