3
யாழில்நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான பெறுமதியான நகை மற்றும் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கூரையை பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 30 பவுண் நகைகள் மற்றும் 40 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்