2
அம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு ! on Thursday, December 26, 2024
அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனாநாயக்கபுர பகுதியில் நேற்று புதன்கிழமை (25) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நவகம்புர பகுதியைச் சேர்ந்த 35 – 40 க்கு இடைபட்ட வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்கம்பத்தில் ஏறி கம்பிகளை அறுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.