பாதாள குழுக்களிடம் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாதாள உலக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலையும் இல்லாதொழிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு முன் வெளிப்படுத்த முடியாது என அங்கு அவர் சுட்டிக்காட்டினார்.
“பாதாள உலக்குழு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் கீழ் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் இருக்கின்றனர். ருவன்வெல்ல முழுப் பொலிஸாரையும் மாற்ற வேண்டி ஏற்பட்டது. புலனாய்வுப் தகவல்களை பெற்று. அதுமட்டுமல்லாமல் அவிசாவளையில். இவர்கள் ஒரு வலையமைப்பு. பாதாள உலக்குழுக்களிடம் பணம் பொலிஸாரின் கைகளுக்கும் செல்கிறது.
“நாங்கள் பொலிஸ் மா அதிபரை அழைத்து கலந்துரையாடினோம். இப்போது பாதாள உலகக்குழுவை வழிநடத்துபவர்கள் மத்துகமவில் இருக்கிறார்கள்.”
“இதை ஒரு பிரச்சனையாகவே பார்க்கிறோம்.நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது கடினம்.போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழு தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.