பாதாள உலக கும்பலின் தலைவரான “ஹோமாகம ஹந்தயா” வின் உதவியாளர் கைது 26 Dec, 2024 | 03:27 PM

by sakana1

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “ஹோமாகம ஹந்தயா” என்று அழைக்கப்படும் தனுஜ சம்பத் என்பவரின் உதவியாளர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (24 ) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மீகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 05 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 ஆயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “ஹோமாகம ஹந்தயா” என்பவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்