திருக்கோவில் சங்கமன்கண்டி:சடலங்கள் கரை ஒதுங்கின!

by wp_shnn

கிழக்கின் திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள்  விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது.

சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, மகன் மற்றும் அவரது மருமகனான சிறுவன் உட்பட 3 பேர் கடல் புதன்கிழமை (25) மாலை அலை இழுத்துச் சென்றதில் காணாமல் போயிருந்தனர்.

சங்கமன் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய மகன் டினுஜன்  மற்றும் நந்தராஜின்; சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு கடலில் மூழ்கிக் காணாமல் போயிருந்தனர்.

மூவரும்  நத்தார் பண்டிகையையிட்டு புதன்கிழமை (25)  மாலையில் கடலில் நீராடச் சென்றிருந்தனர். முதலில் கடலில் இறங்கிய அவரது மகனும், மருமகனும், கடலில் நீராடிக் கொண்டிருந்த போது, கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.  அவர்களைக் காப்பாற்றத் தந்தையும் கடலில் குதித்துள்ளார்.  தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போயிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள்  விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்