சிறைச்சாலையில் அமைதியின்மை – 33 பேர் உயிரிழப்பு

by wamdiness

மொசாம்பிக் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையால் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது 1,534 பேர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தப்பிச்சென்றவர்களில் 150 பேர் மீளக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினத்தில் மொசம்பிக்கின் 2 சிறைகளில் சிறை உடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related

தொடர்புடைய செய்திகள்