கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; மூவர் காயம்

by wp_fhdn

கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; மூவர் காயம் பதுளை , பண்டாரவளை நகரத்தில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது, காரானது திடீரென தீப்பற்றி எரிந்துள்ள நிலையில் பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்