கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு !

by smngrx01

கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு ! on Thursday, December 26, 2024

ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (25) மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ​​பிரதேசவாசிகள் அவரை கரைக்கு அழைத்து வந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் நபர் உயிரிழந்துள்ளார்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்