கடலில் மாயமான தந்தை,மகன், மருமகன் சடலங்களாக மீட்பு

by sakana1

கடலில் மாயமான தந்தை,மகன், மருமகன் சடலங்களாக மீட்பு திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள்  விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, மகன் மற்றும் அவரது மருமகனான சிறுவன் உட்பட 3 பேர் கடல் புதன்கிழமை (25) மாலை 5.30 மணிக்கு அலை இழுத்துச் சென்றதில் காணாமல் போயிருந்தனர்.

சங்கமன் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய மகன் டினுஜன்  மற்றும் நந்தராஜ் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் அவரது மகன்? சகோதரியின் மகன் ஆகிய மூவரும்  நத்தார் பண்டிகையையிட்டு புதன்கிழமை (25)  மாலையில் கடலில் நீராடச் சென்றிருந்தனர். முதலில் கடலில் இறங்கிய அவரது மகனும், மருமகனும், கடலில் நீராடிக் கொண்டிருந்த போது, கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.  அவர்களைக் காப்பாற்றத் தந்தையும் கடலில் குதித்துள்ளார்.  தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்