ஆழிப்பேரலை எனும் கடல்கோளால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 20 வது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டுள்ளது.
2004 அன்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ சுனாமி என்கின்ற ஆழிப்பேரலை மிகமிக மோசமாக தாக்கியது.
இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் உருவாகிய பூமி அதிர்வு ஆழிப்லேரலையாக மாறி சுற்றியுள்ள நாடுகளைத்தாக்கியதுடன் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள 15கரையோரமாவட்டங்களில் 11 மாவட்டங்களை நேரடியாக தாக்கி 26777. மனித உயிர்கள் காவுகொண்டது.
சுனாமியால் வடக்கு கிழக்கில் 17200 பேர் உயிரழந்தும் 30ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
அந்தவகையில் இலங்கையில் அதிகளவான மக்கள் உயிரிழந்த மாவட்டமாக அம்பாறை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 9051 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவலடி என்னும் ஒருகிராமம் முற்றக கடலில்மூழ்கி இல்லாமல்போயிருந்தது.மாவட்டத்தில் 2975பேர் உயிரிழந்தனர், திருகோணமலை மாவட்டத்தில் 984பேர் உயிரிழந்தனர்.
முல்லைத்தீவுமாவட்டமும் அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2902 பேர் உயிரிழந்தனர்.
கிளிநொச்சிமாவட்டம் ஆழிப்பேரலையில் நேரடியாகப்பாதிக்கப்படவில்லை எனினும் மறைமுகமாக அதாவது தொழில் நிமிர்த்தமும் உறவினர்களின் வீடுகளில் முல்லைத்தீவுக்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிகிழக்குப் பிரதேசங்களுக்கும் சென்றிருந்தவர்களில் 32 பேர் உயிரிழந்திருந்தனர்.யாழ்ப்பாணமாவட்டத்தில் 1256 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 1250பேர் வடமராட்சிகிழக்கைச்சேர்ந்தவர்கள் ஆவர். 6 பேர் மட்டும்தான். இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 4500பேர் உயிரிழந்தனர். காலிமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 3774பேர் உயிரிழந்தனர். மாத்தறைமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 1061பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கிலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது,