ஆளுமையற்ற தலைமைகளால் வடக்கில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கள் திண்டாடிவருகின்றது.இந்நிலையில் தமது பலவீனங்களை மறைக்க ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (26) வியாழக்கிழமை நடைபெற்றது.
வழமைபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளர் தம்பிராசாவுக்கு அனுமதி வழங்கியது யார் என்றும் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.
எனினும் ஊடகவியலாளர்கள் பேரில் அருச்சுனாவால் அழைத்து வரப்பட்ட சில சமூக பதிவாளர்களே குழப்பத்தை ஏற்பட்டியதாக கூறப்படுகின்றது.