வவுனியா சிறைச்சாலையில் பொதுமன்னிப்பின் கீழ் 8 கைதிகள் விடுதலை !

by adminDev2

on Wednesday, December 25, 2024

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று புதன்கிழமை (25) விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்