கொலை சம்பவம்; தந்தையும் மகனும் கைது!

by wp_shnn

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர், மாதம்பை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமட்டபிட்டிய பகுதியில் 42 வயதுடைய நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பின்னணியிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கரவிடகராய பகுதியில் வசிக்கும் முறையே 53, 28 வயதுடைய தந்தை மற்றும் மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: DematapitiyaMadampeமாதம்பை

தொடர்புடைய செய்திகள்