விடுதலை 2 திரைப்படம் படைத்துள்ள புதிய சாதனை!

by wp_shnn

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த விடுதலை 2  திரைப் படத்தின் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023ஆம்  வெளிவந்த திரைப் படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, கதையின் நாயகனாக மாறினார். இது அவருக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது.

இந்நிலையில் இப் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 கடந்த வாரம் வெளிவந்தது. முதல் பாகத்தில்  சூரி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதைப் போன்று இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில்  மஞ்சு வாரியர், கிஷோர், சேத்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்நிலையில் திரைப்படம் வெளியாகி  ஐந்து நாட்டிகளில்  உலகளவில் 42 கோடி ரூபாய் வசூல்  செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்