இலங்கை பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து கண்காணிப்பின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட போக்குவரத்து நடவடிக்கையின் கீழ் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் உட்பட மொத்தம் 8,747 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் கடந்த 23 ஆம் திகதி முதல் இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், ஏனைய வாகனங்கள் உள்ளிட்ட விபத்துக்களை கருத்திற்கொண்டு விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.