கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி நகருக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் , 2 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் , தாய் , தந்தை மற்றும் 06 வயது சிறுமி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் காணப்பட்டதாகவும், டிப்பர் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி தள்ளி , சுமார் 100 மீற்றர் தூரம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் டிப்பர் பயணித்து தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி டிப்பர் நின்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கிளிநொச்சி பொலிஸார் சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.