இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிபிசி உலக சேவை
  • பதவி,

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து பிறந்த மத்திய கிழக்கு பிரதேசம், இறைத்தூதர்கள் பலர் உருவான பகுதி என்பதில் சமகால வரலாற்று அறிஞர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

அப்படியிருக்கையில், மதம் ஒருபுறமிருக்க, கிறிஸ்தவத்தை நிறுவியவராகக் கருதப்படும் இயேசு, அக்காலத்தைச் சேர்ந்த பலருடன் மிகவும் ஒத்த நபராகவே இருந்தார்.

ஆனால், இன்றளவும் இந்த உலகில் கோடிக்கணக்கான நபர்கள் பின்பற்றும் ஒருவராக இயேசு மட்டும் பிரபலமானது எப்படி?

மற்ற இறைத்தூதர்கள் பிரபலமாகாதது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதற்கு இயேசுவின் ஆரம்பகால சீடர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்கள், முதலாம் நூற்றாண்டு இறுதியிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு முழுவதும் கிறிஸ்துவின் செய்தியை பரப்புவதில் தங்களை அர்ப்பணித்தனர்.

முதல் தலைமுறை சீடர்களால் கிறிஸ்தவம் ஒருங்கமைக்கப்பட்டதில், இயேசு உயிருடன் இருந்தபோதும், அவர் இல்லாத போதும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருந்தது.

ஆனால், கிறிஸ்தவம் எப்படி இஸ்ரேல் எல்லையைக் கடந்து உலகம் முழுவதும் பரவியது என்பது குறித்து புரிந்துகொள்வதற்கு சில வரலாற்று ரீதியான மானுடவியல் சார்ந்த பார்வைகள் உள்ளன.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

இறைத்தூதர்களின் களஞ்சியம்

இயேசு காலத்தில் பாலத்தீனத்தில் ரோமானியர்கள் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

“ரோமானிய ஆதிக்கம் அப்பகுதியில் மிக தீவிரமாக உணரப்பட்டது. இதனால் மாற்று நம்பிக்கைகள் மற்றும் தீர்வுகளுக்கான தேடல்கள் உருவாகின,” என பான்டிஃபிகல் கத்தோலிக் யூனிவர்சிட்டி ஆஃப் கேம்பினஸ் எனும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இறையியலாளருமான பாவ்லோ நொகுவெரியா கூறுகிறார்.

“அப்பேரரசின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் யூத சமூகம் விளிம்புநிலையில் இருந்தனர். கடவுளால் உறுதியளிக்கப்பட்ட சுதந்திரமும், சிறந்த எதிர்காலமும் தங்களுக்கு இருப்பதாக அச்சமூகத்தினர் உணர்ந்தனர்,” என்கிறார் அவர்.

“ஆனால், அப்படி உறுதியளிக்கப்பட்ட சுதந்திரத்தை நாம் எப்படி பெறுவது? சிறந்த எதிர்காலத்தை நமக்கு வழங்கவல்ல கடவுளுக்கு நாம் நம்பிக்கைக்குரியோராக இருப்பது எப்படி?” என கேட்கிறார் அவர்.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Public Domain

மெக்கென்ஸி பிரெஸ்பைடெரியன் பல்கலைக்கழக பேராசிரியரும் வரலாற்று மற்றும் தத்துவ அறிஞரும் இறையியலாளருமான கெர்சன் லெயிட் டீ மோரேஸ், இறைத்தூதர்கள் தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

ஒன்று, யூத மக்கள் தங்களை ‘கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ என நம்பியது, மற்றொன்று புனித நிலம் (Holy Land) என அறியப்பட்ட பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டது.

“நாடு கடத்தப்படுவது யூதர்களுக்கு ஒரு தண்டனையாக இருந்தது. அவர்கள் மீண்டும் திரும்பி வந்தபோது, தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டனர். கடவுள் ஏன் நம்மை இவ்வளவு இன்னல்களை அனுபவிக்கச் செய்கிறார் என்பதை புரிந்துகொள்ள நினைத்தனர்,” என்கிறார் அவர்.

“எனவே, அவர்கள் தங்களின் வாழ்க்கையை வழிநடத்துவதற்கான நம்பிக்கையாகவும் நடைமுறையாகவும் மோசஸ் சட்டத்தைப் (law of Moses) பின்பற்றத் தொடங்கினர். அதனை தங்களின் நன்னெறி மற்றும் மதநெறியாக பின்பற்றத் தொடங்கினர். தாங்கள் கவனக்குறைவாக நடந்துகொண்டதாலேயே தண்டிக்கப்பட்டதாக அவர்கள் கருதினர்,” எனவும் அவர் தெரிவித்தார்.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Public Domain

படக்குறிப்பு, ஃபிளாவியஸ் ஜோசஃபஸ்

இது யூத மதத்திற்குள்ளேயே சில சூழ்நிலைகள் வளர்வதற்கு வழிவகுத்தது.

“அவற்றில் ஒன்று இறைத்தூதர்களின் மறுமலர்ச்சி, அதனுடன் அபாகலிப்டிக் இலக்கியமும் வளர்ந்தது,” என மோரேஸ் சுட்டிக்காட்டுகிறார்.

“இது இலக்கியம் சார்ந்த இயக்கம் என்றாலும் மதம் சார்ந்ததும் ஆகும். இது, துன்பத்தில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையான செய்தியை உருவகம் மற்றும் குறியீட்டு முறையில் உணர்த்துவதாகும். அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு வழியாக இது மாறியது” என்று விவரிக்கிறார் அவர்.

“அதன் விளைவாக, இறைத்தூதர்கள் தொடர்பான கருத்து வலுவானது,” என்கிறார் அவர்.

”அதாவது, ரோமானிய ஆட்சியின் துன்பங்களிலிருந்து இம்மக்களை விடுவிக்க யாராவது ஒருவர் வருவார் என்ற கருத்து நிலவியது.” என மோரேஸ் தெரிவித்தார்.

“யாரவது ஒருவர் இதற்காக கடவுளால் அனுப்பப்படுவார் என நம்பினர். இந்த காலக்கட்டத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினர். இயேசுவின் வருகைக்கான அனுகூலமான காலமாக இது இருந்தது,” என்கிறார் அவர்.

தீர்க்கதரிசிகள், மீட்பர்கள், கொள்ளைக்காரர்கள்

இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலக்கட்டத்தில் மூன்று விதமான சமூக கிளர்ச்சியாளர்கள் இருந்ததாக அடிக்கடி சொல்லப்படுகின்றது. அவர்கள், கொள்ளைக்காரர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் இறைத்தூதர்கள்.

கொள்ளையடித்தல் உள்ளிட்ட செயல்களால் கொள்ளைக்காரர்கள் ரோமானிய அரசுக்கு எதிராக செயல்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள குகைகளில் மறைந்து வாழ்ந்தனர்.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Public Domain

படக்குறிப்பு, யோவான் ஸ்நானகன்

அவர்களுள், கி.மு 47 முதல் கி.மு 38 வரை எசேக்கியா என்பவர் இருந்தார். மற்றொரு நன்கு அறியப்பட்ட கிளர்ச்சியாளரான எலேஸார் பென் யாயிர், கிறிஸ்துவுக்குப் பிறகு சில காலமே வாழ்ந்தார்.

டோலோமௌ எனும் குழு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது. பின்னர், “60களில் இயேசு வந்தார்,” என்கிறார் மோரேஸ்.

கிளர்ச்சித் தலைவர் ஜான் ஆஃப் கிஸ்சாலாவும் இந்தப் பிரிவை சேர்ந்தவர். இவர்கள் மதத்தைப் பரப்பும் பணியில் இருந்தனர்.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய ஜூவான் பதிஸ்டா-வை நினைவுகூர்கிறார் மோரேஸ். “இவர் சமரடென் (இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்) என அறியப்படுகிறார்”

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் வரலாற்று மைய பேராசிரியரான வரலாற்று அறிஞர் ஆண்ட்ரே லியானர்டோ செவிடாரெஸ் மூன்று விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்: கேலலியன் யூதாஸ்; யோவான் ஸ்நானகன் மற்றும் எகிப்தியர் (The Egyptian).

“அவர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள். ஆனால், யூதர்கள் வாழ்ந்த நிலம் என்பது இதில் முக்கிய பங்கு வகித்தது,” என்கிறார் அவர்.

“இதைப் பற்றி புரியவைக்க வேண்டும் என்றால், உதாரணமாக ஒருவர் பிடிக்கும் ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து மீன்களுள், பத்தில் ஒரு பங்கை தேவாலயத்திற்கும் ஒருபங்கை நிலம், படகு மற்றும் வலைக்கான வாடகையாகவும் மற்றொரு பங்கை ரோமானிய அரசுக்கு வரியாகவும் செலுத்த வேண்டும்,” என்கிறார் செவிடாரெஸ்.

“மிஞ்சியதை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டும். இது, கிளர்ச்சி ஏற்பட வழிவகுத்தது,” என விளக்குகிறார்.

முக்கிய தலைவர்கள்

இந்த சூழலை வைத்துப் பார்க்கும்போது, “கேலலியன் யூதாஸ் மிகச்சிறந்த யூதத் தலைவராக இருந்திருக்கலாம்,” என்கிறார் செவிடாரெஸ்.

விவசாயிகளுக்கு மத்தியில் பெரும் ஆதரவு கொண்ட தலைவராக யூதாஸ் அறியப்படுகிறார்.

அவர், கி.பி 6-ல் அவர் கிளர்ச்சி ஒன்றை வழிநடத்தினார். “தனக்குப் பின்னால் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்த ஒருவர்” என விவிலியத்தில் அவரை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ரோமானிய வரலாற்று அறிஞர் பெலாவியுஸ் ஜொசிபஸின் (37-100) குறிப்புகளிலும் அவர் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடவுளுக்காக அல்லாமல் வேறு நோக்கங்களுக்காக வரி செலுத்த சம்மதிக்கும் எந்தவொரு யூதரும் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டதாகக் கருதப்படுவார் என அவர் கூறியுள்ளார்,” என்கிறார் செவிடாரெஸ்.

“இது, கடவுளுக்கு சொந்தமான நிலத்தில் ரோமானியர்களின் இருப்பு மீதான எதிர்ப்பை உணர்த்துகிறது” என அவர் விவரிக்கிறார்.

யோவான் ஸ்நானகன், விவிலியத்தில் இயேசுவின் உறவினராகவும் அவருக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

“அவர் இயேசுவின் சமகாலத்தாவர். மிகவும் முக்கியமானவராகவும் அதிகம் அறியப்பட்டவராகவும் கருதப்படுகிறார். அவர் மிகச்சிறந்த இறைத்தூதராக அறியப்படுகிறார். ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவருடைய சீடராக ஆனார் இயேசு. இந்த இயக்கத்தில் அவருடனேயே இணைந்து, பலவற்றை கற்றார்,” என ஃபெடரல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆண்ட்ரே லியானர்டோ செவிடாரெஸ் குறிப்பிடுகிறார்.

“யோவான் ஸ்நானகன் அல்லது நாஸரேத்து, இவர்களில் யார் இறைத்தூதர் என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்த பிரபலமான இயக்கங்களை நாம் சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்” என அவர் தெளிவுபடுத்துகிறார்.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

‘எகிப்தியர்’ எனும் தலைவர் ஆற்றிய பங்கையும் செவிடாரெஸ் நினைவுகூர்கிறார். ஃபிளாவியஸ் ஜோசஃபஸின் விவரணைகள் மற்றும் விவிலியத்தின் திருத்தூதர் பணிகளில் இவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

“கிளர்ச்சி செய்து நான்காயிரம் திருடர்களை பாலைவனத்திற்கு அழைத்துச் சென்ற எகிப்தியர் நீங்கள் அல்லவா?” என விவிலியத்தில் அவர் குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது.

ஆட்ரோஜெஸ், ஜான் ஆஃப் கிஸ்சாலா, சைமன் பார் ஜியோரா (Simon Bar Giora), மெனாக்கம் (Menachem), தியோடஸ் (Theudas) ஆகியோர் இருந்தனர். “இவர்கள் அனைவரும் இயேசுவின் காலத்திலும் அதற்குப் பிறகும் இறைத்தூதர்களாக இருந்தனர்,” என கூறுகிறார் செவிடாரெஸ்.

சாவ் பாவ்லோவின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் பண்டைய கிறிஸ்துவம் குறித்த ஆராய்ச்சியாளர் தியாகோ மேர்கி, அந்த காலக்கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு இறைத்தூதரை நினைவுகூர்கிறார். அவர்தான், அப்போலோனியஸ் ஆஃப் டியானா.

“இயேசு மற்றும் அப்போலோனியஸின் வாழ்க்கை குறித்து நாம் அறிந்தவற்றில் ஒத்த பல குறிப்புகள் உள்ளன. அவர்களுடைய காலத்தில் இருவருக்கும் இடையே போட்டி நிலவியதாகவும் தெரிகிறது,” என்கிறார் அவர்.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

“அப்போலோனியஸ் பிறப்பதற்கு முன்பு அவருடைய தாயை சொர்க்கத்திலிருந்து வந்து பார்த்ததாகவும், அவருடைய மகன் சாதாரண மனிதப்பிறவியாக அல்லாமல், தெய்வப் பிறவியாக இருப்பார் என அவரிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது,” என மேர்கி கூறுகிறார்.

இறந்தவர்களை உயிருடன் வரவைக்கும் அதிசயங்களை நிகழ்த்தக்கூடியவராகவும் அவர் நம்பப்படுகிறார். இது, இயேசுவின் வாழ்க்கையை ஒத்ததாக இருக்கிறது.

யூதத்திற்குள்ளாக நிகழ்ந்த இயக்கங்கள்

இயேசுவால் நிகழ்த்தப்பட்டது உட்பட இந்த அனைத்து இயக்கங்களும் ரோமானிய பேரரசுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலகம் நிறைந்ததாகவே இருந்தன.

ஆனால், இயேசு பிரபலமானது ஏன்? மற்றவர்கள் ஏன் காலப்போக்கில் காணாமல் போயினர்?

இந்த இயக்கங்கள் அனைத்தும் யூத மதத்திற்குள்ளாக நிகழ்ந்தவை என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், குறிப்பிட்ட எல்லையைக் கடந்து பரவியதற்கான திறன் வாய்ந்ததாக கிறிஸ்துவம் மட்டுமே இருந்துள்ளது.

“யூத இயக்கங்கள், மத்திய தரைக்கடலில் யூதர்கள் புலம்பெயர்ந்த இடங்களுக்குப் பரவின. அங்கு அது கிரேக்க-ரோமானிய உலகின் பிற மத வடிவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டாம் நூற்றாண்டு வரை அது, யூத மதத்துடனேயே தொடர்புப்படுத்தப்பட்டது, மேலும் பலரால் தெய்வ வழிபாடாகவே பார்க்கப்பட்டது,” என நொகுவெரியா சுட்டிக்காட்டுகிறார்.

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

“இந்த இயக்கங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஏனெனில், அவை அனைத்தும் யூத மதத்தின் அரசியல், மத மற்றும் பொருளாதார கருத்துக்களுக்கு சவால் விடுப்பதாகக் கருதப்பட்டது,” என்றும் செவிடாரெஸ் கூறுகிறார்.

கிறிஸ்துவத்தை பொறுத்தவரை இயேசு இறையரசாக கருதப்பட்டார். அதாவது, சீசரின் அநீதிக்கு எதிரான நீதியரசாக, போர்க்காலச் சூழலில் அமைதியின் அரசாக, பஞ்ச காலத்தில் செல்வ வளத்தின் அரசாக கருதப்பட்டார்.

“மேலும், பாலின சமத்துவத்தின் அரசாக கருதப்பட்டார். அதாவது சீசரின் அரசில் நிலவிய சமூக அடுக்குகளுக்கு எதிராக ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் அறுவடைக்கு அழைக்கப்படுவர்,” என்கிறார் செவிடாரெஸ்.

சீடர்கள்

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

இயேசுவின் சீடர்களாலேயே எல்லை கடந்து கிறிஸ்தவ மதம் பரவியது.

“இயேசு இறந்த பின்னர், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில், அவருடைய சீடர்கள் மிகவும் திறம்பட செயலாற்றினர்,” என்கிறார் மோரேஸ்.

அதேசமயம், மற்ற இறைத்தூதர்களின் இயக்கங்கள், தேச அளவிலும் குறிப்பிட்ட இன அளவிலும் சுருங்கின. “அந்த எல்லையைத் தாண்டி அவை முக்கியத்துவம் பெறவில்லை,” என மதிப்பிடுகிறார் செவிடாரெஸ்.

நொகுவெரியாவைப் பொறுத்தவரையில் இயேசு பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் பெற்றதற்கு, “அவரிடம் உள்ள தெய்வீக சக்தியும், தன்னை பின்பற்றுபவர்களுடன் பொருந்திப்போதல் மற்றும் அவர்கள் மீது தாக்கம் செலுத்துதல் ஆகியவை தான் காரணம்,” என்றார்.

“இயேசு மிகவும் சக்திவாய்ந்த இறைத்தூதர், அற்புதங்களை நிகழ்த்துபவர். அப்படித்தான் அவரை பின்பற்றுபவர்கள் இயேசுவை புரிந்துகொண்டுள்ளனர்.”

இதற்கு மத ரீதியிலான பார்வையும் உள்ளது.

“இயேசு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறைத்தூதர் என்பதாலேயே அவருடைய இயக்கம் வெற்றி பெற்றது என்று நம்புகின்றனர்,” என்கிறார் மோரேஸ்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.