8
விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை – சந்தேகநபர் கைது ! on Wednesday, December 25, 2024
திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
திக்வெல்ல, வத்தேகம தெற்கு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய திக்வெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலும், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.