5
ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக ப்ரீபெய்டு கார்டு தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரலுக்கு முன்னதாக இந்த புதிய அட்டையை அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தந்த ரயில்களின் ப்ரீபெய்ட் டிக்கெட்டை சரிபார்க்க அதிகாரிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.