6
on Wednesday, December 25, 2024
நத்தார் பண்டிகையான புதன்கிழமை (25) அன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.