5
மாணிக்கப்போடி அறக்கட்டளையினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு on Tuesday, December 24, 2024
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற் குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு மாணிக்கப்போடி அறக்கட்டளையினால் நூலகத்திற்கு தேவையான ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான பாட பயிற்சி புத்தகங்கள், கடந்த கால வினாத்தாள் புத்தகங்கள், சிறுகதை, கவிதை மற்றும் கதை போன்ற பொதுவான புத்தகங்களும் இதன்போது கையளிக்கப்பட்டன
திருமதி நல்லம்மா மாணிக்கப்போடி அவர்களின் ஞாபகார்த்தமாக குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதனை அறக்கட்டளையின் ஸ்தாபகர் குமாரசாமி, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.