6 வகையான பயிர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு !

by guasw2

on Tuesday, December 24, 2024

பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய பயிர்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 02ஆம் திகதி வரையில் கடந்த சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பில் விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்