by sakana1

அமெரிக்க பத்திரிகையாளர் சிரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கருதப்படும் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொள்ளாது அமெரிக்க பத்திரிகையாளர்  ஒஸ்டின்டைஸ் சிரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியில்  இஸ்ரேல் தாக்குதலை மேற்கொள்ளாது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதியளித்துள்ளார்.

பத்திரிகையாளரின் தாயார் டெப்ராடைஸிற்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த விதத்திலேயே இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினரும் ஏனையவர்களும் செயற்பாடுவார்கள் என அந்த கடிதத்தில்; தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு பத்திரிகையாளர் சிறைவைக்கப்பட்டுள்ள பகுதியில் இஸ்ரேலிய படையினர் செயற்படவில்லை என தெரிவித்துள்ளார்

பசார் அல் அசாத்த பதவி கவிழ்க்கப்பட்டுள்ளமை தனது 12 வருடங்களிற்கு முன்னர் சிரியாவில் காணாமல்போன தனது மகன் உயிருடன் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையை டெப்ரா டைசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

தனது மகன்  இராணுவ அருங்காட்சியகத்திற்குள் உள்ள இகசியோன் சிறைச்சாலைக்குள்தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தாயார் தெரிவித்துள்ளார்.

அந்த சிறைச்சாலைக்குள் உள்ள சுரங்கப்பாதைக்குள் தனது மகன் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தாயார் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதலில் ஈடுபடாவிட்டால் மேலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்;கொள்ள முடியும் என 12 வருடங்களிற்கு முன்னர் காணாமல்போன பத்திரிகையாளரின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க பத்திரிகையாளர் 2022 இல் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படும் பகுதியொன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டைஸ் 12 வருடங்களிற்கு முன்னர் சிரியாவில் உள்நாட்டு போர் இடம்பெற்றவேளை காணாமல்போயிருந்தார்.

அவர் உயிருடன் உள்ளாரா என்பது தெரியாத நிலை நீடிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்