6
புதையல் தோண்டிய மூவர் கைது ! on Tuesday, December 24, 2024
By Shana
No comments
புதையல் பொருட்களை தேடி அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிராந்துருகோட்டை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மாலை கிராந்துருகோட்டை ஹங்கலஓய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் 29 – 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிரந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like these posts