2
கிறிஸ்தவ மக்களுக்கு விசேட அறிவிப்பு எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறு கொழும்பு பேராயர்களுக்கான மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கிறிஸ்த்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த மத ஸ்தலங்களிலும் தேவாலயங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இதனை தெரிவித்தார்.