6
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, தம்மிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் 77 வயதான ஹசீனா, அந்நாட்டு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களால் ஆட்சியை இழந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஹசீனா அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப இந்தியாவில் உள்ள தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பங்களாதேஷின் இடைக்கால அரசு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.