வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தேவையான பாரியளவு நட்ட ஈட்டுத்தொகை

by guasw2

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தேவையான பாரியளவு நட்ட ஈட்டுத்தொகை மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈடாக 3000 மில்லியன் ரூபா தேவையென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (24) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, விசேடமாக தற்போது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகாவினால் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், குரங்கு மற்றும் யானை தாக்கத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்