4
சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலை கொண்டு சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியை சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் இருந்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டி , சந்தைக்கு விற்பனைக்காக எடுத்து சென்ற போது , வீதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
வீதியில் சென்றவர்களை அவரை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்த போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
இதய வால்வு சுருக்கம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது