மதுபானசாலைகளை மூடுங்கள்: கிளிநொச்சியில் கண்டன பேரணி

by admin

கிளிநொச்சியில் அதிகரித்த  மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,

ஜனாதிபதிக்கான மனு ஒன்றும்  கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  மாவட்டத்தில்  அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தின் போது அதிகரித்த மதுபான சாலைகளை  மூடுமாறும் கோரி  கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மத தலைவர்கள் இணைந்து மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரனிடம் கையளித்துள்ளனர்.

இப்போது போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள் மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம மட்ட அமைப்புக்களின்  பிரதிநிதிகள் பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

தொடர்புடைய செய்திகள்