“தி ஸ்மைல் மேன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது! (வீடியோ)

by guasw2

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்மைல் மேன் திரைப் படம் எதிர்வரும்  27 ஆம் திகதி திரையரங்குகளில்  வெளியாகவுள்ள நிலையில் அதன்  டிரெய்லர்  தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத் திரைப்படம் சரத்குமாரின் 150 ஆவது திரைப்படமாகும்.  இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும் ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்படுகின்றார். இதுவே இத்திரைப்படத்தின் கருவாகும்.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள  இத்திரைப்படமானது    ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்