தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா

by guasw2

தாய்வானுக்கும் சீனாவுக்கும் போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில், தாய்வானுக்கு  57.1 கோடி டொலர்கள்  பெறுமதிவாய்ந்த  இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தார்.

அமெரிக்காவின் குறித்த நடவடிக்கை  சீனாவுக்கு  பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அரசு நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தாய்வானுக்கு ஆயுதம் அளிப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். தாய்வான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அபாயகரமான நகர்வுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

சுமாா் 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட  தாய்வானை, சீனா தனது பிராந்தியமாக உரிமைக் கோரி வருகின்றது.இவ்விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்