தமிழக மீனவர்கள் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

by admin

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்களை இன்று நண்பகல் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: தலைமன்னார்

தொடர்புடைய செய்திகள்