டெல்லியால் திரும்பி சீனாவிற்கு பயணம்:புதிய கைது!

by wamdiness

ஜனாதிபதி அனுரவின் டெல்லி விஜயத்தின் பின்னராக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த   17 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கட்கிழமை (23) 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் இரவு வேளை தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு விசை படகையும்  அதிலிருந்து   17 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான 8 பேர் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது..

தொடர்புடைய செய்திகள்