சேதமடைந்த வீதிகளை விரைவாகப் புனரமைக்க வேண்டும்! -ஹிஸ்புல்லாஹ்

by admin

அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் அவர்களிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்தார்.

காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில்  நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம். திலகரத்னே, காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எஸ்.எம். அஸ்பர்  பொதுமக்கள் எனப் பலரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்