குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

by adminDev2

தமிழீழம்

குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு Posted on December 24, 2024 at 06:58 by நிலையவள்

5 0

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்தார்.

நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு நேற்று திங்கட்கிழமை வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது

Previous Post

Next Post

தொடர்புடைய செய்திகள்