7
கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் கோபுர பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஈபிள் கோபுரத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதுளது.அதன்படி ஈபிள் கோபுரத்தில் உள்ள மின்தூக்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
முதல் தளத்திற்கும் 2ஆவது தளத்திற்கும் இடையே மின்தூக்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் கோபுர பகுதியில் குவிந்திருந்த 12,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும், ஈபிள் கோபுர பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.