வீடியோ ஒன்றில் பாலஸ்தீனரியரின் உடலிற்கு அருகில் சிரித்தபடி காணப்பட்ட இஸ்ரேலிய படைவீரர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என 20 இலங்கை பிரiஜைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான சுவஸ்திகா அருளிங்கம் தனது முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
கடந்த வாரம் பெல்ஜியத்தை சேர்ந்த ஹிண்ட் ரஜாப் பவுண்டேசன் என்ற அமைப்பு பெரென்புக் என்ற இஸ்ரேலிய படைவீரர் இலங்கையில் உள்ளார் என தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தது.
சிலநாட்களிற் முன்னர்; அந்த நபர் மற்றுமொரு இஸ்ரேலிய படைவீரருடன் இணைந்து உயிரிழந்த நபர் ஒருவரின் ( பாலஸ்தீனியர் ) உடலை பார்த்து எள்ளிநகையாடும் வீடியோ வெளியாகியிருந்தது என அந்த அமைப்பு தனது இணையத்தளத்தில் தெரிந்திருந்தது.
அந்த வீடியோவில் காணப்படும் மற்றையை நபர் கல்பெரென்புக்கினை இறந்துநிலையில் காணப்படும் நபரின் டேர்மினேட்டர் என அழைக்கின்றார்.
இருவரும் இறந்தவரின் உடலை பார்த்து எள்ளிநகையாடுவதை அவதானிக்க முடிகின்றது.
இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பொலிஸார் ஆகியோரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்திருந்த ஹிண்ட் ரஜாப் அமைப்பு இலங்கை அதிகாரிகளிற்கும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இதன் பின்னர் உள்ளுர் ஊடகவியலாளர்கள் இந்த செய்தியை வெளியிட்டனர் இஸ்ரேலிய படைவீரர் என கருதப்படும் நபர் இலங்கையில் உள்ளமை குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
எனினும் ஹிண்ட் ரஜாப் அமைப்பு தெரிவித்துள்ளதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எவையும் இல்லை என புத்திகமாரசிங்க தெரிவித்தார்.
எனினும்இலங்கையில் உள்ள அராபிய பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்டுள்ள இஸ்ரேலிய படைவீரரை உடனடியாக நாடு திரும்பும்படி இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என 20 ம் திகதி இஸ்ரேல் நஷனல் நியுஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஹிண்ட் ரஜாப் அமைப்பு தெரிவித்துள்ளது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் இது தார்மீக அரசியல் பாதுகாப்பு விவகாரம் என்பதால் இஸ்ரேலிய படைவீரர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தை பொதுமக்களிற்கு தெரியப்படுத்தவேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் நியமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளி;ல் உள்ள ஏனைய அராபியர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் இஸ்ரேலியர்களின் நடைமுறைகளை ஆராயும் விசேட குழுவில் இடம்பெற்றுள்ளதால் இது முக்கியமான விடயம்.
இஸ்ரேலின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இனப்படுகொலையின் பண்புகளுடன் ஒத்துப்போகின்றது என அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இதனடிப்படையில் இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்து 20 பிரஜைகள் பொலிஸ்மா அதிபரிடம் கடிதமொன்றை ஒப்படைத்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் சட்டமா அதிபர் சிஐடியின் இயக்குநர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய படைவீரர்களை அடையாளம் காணுமாறும் அவர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.