இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

by guasw2

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சிவில் உடையில் சுமார் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் ஏனைய நகரங்களில் பாதுகாப்புக்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: Colombopoliceபாதுகாப்புபொலிஸ்

தொடர்புடைய செய்திகள்