அர்ச்சுனா எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டு பொய்யானது !

by guasw2

அர்ச்சுனா எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டு பொய்யானது ! on Tuesday, December 24, 2024

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், பதில் அத்தியட்சகராக கடமையாற்றிய தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர மருத்துவ அலகு கட்டடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டதாகவும் மிகுதிப் பணம் ஊழல் செய்யப்பட்டதாகவும் பொதுவெளியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பான உண்மை தன்மையை அறிந்துகொள்ள, பசுந்தேசம் அமைப்பு தகவல் அறியும் சட்டம் ஊடாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் அதற்கான பதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு கோரிய விளக்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் பின்வருமாறு,

1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க SHDP (இரண்டாவது) என்கின்ற ஐந்தாண்டு திட்டத்தில் தான் கட்டுமாண வேலைகள் நடைபெற்றன. அதனால் இதற்கென தனித் திட்டமொன்று (Master Plan) போடப்படவில்லை. மேலும் கட்டுமாண வேலைகள் யாவும் கட்டிடங்கள் திணைக்களம் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட்டு கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

3. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க கீழ்வரும் முறையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.2015ஆம் ஆண்டு – 15மில்லியன், 2016ஆம் ஆண்டு – 41.49மில்லியன், 2017ஆம் ஆண்டு – 35.38மில்லியன், 2018ஆம் ஆண்டு – 26மில்லியன், 2020ஆம் ஆண்டு – 2.00மில்லியன், 2021ஆம் ஆண்டு – 2.56மில்லியன், 2021ஆம் ஆண்டு -4.93மில்லியன், 2022ஆம் ஆண்டு – 3.96மில்லியன், 2022ஆம் ஆண்டு – 0.43மில்லியன், 2023ஆம் ஆண்டு -3.56மில்லியன், 2023ஆம் ஆண்டு -16.91மில்லியன், 2023ஆம் ஆண்டு – 2.654மில்லியன், 2023ஆம் ஆண்டு – 6.69மில்லியன், 2024ஆம் ஆண்டு -12.00மில்லியன், 2024ஆம் ஆண்டு -25.20மில்லியன் , 2024ஆம் ஆண்டு – 3.59மில்லியன் ஆகும். அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்பது அரச தகவல் ஊடாக நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே, வைத்தியர் அருச்சுனா கூறியிருக்கும் இந்த குற்றச்சாட்டு உண்மையாயின், அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் முன்வைக்கவேண்டும் என பசுந்தேசம் அமைப்பு பகிரங்கமாக கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்